எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு எக்ஸ் தள போஸ்ட்டால் ஹேப்பியான ‘தப்பாட்டம்’ படத்தின் நடிகர் அதை ஒரு விழாவாகவே நடத்தி கொண்டாடியிருப்பது தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகளவில் மீம்கள் மொழி பேதமின்றி அவற்றின் நகைச்சுவை தன்மை காரணமாக பிரபலமாகி வருகின்றன.
மிஸ்டர் பீன் காத்திருக்கும் மீம் வீடியோவை ஒவ்வொரு முறையும் புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் நேரத்தை தயாரிப்பு நிறுவனம் அறிவித்து விட்டு சில மணி நேரங்கள் தாமதமாக வெளியாக உடனடியாக மிஸ்டர் பீன் காத்திருக்கும் அந்த காமெடி மீம் டெம்ப்ளேட் வந்து விழுந்து விடும்.
இதையும் படிங்க: போங்காட்டம் ஆடி பிரியாணி வாங்கி கொடுத்த விஜயகாந்த்!. நம்ம கார்த்தி பருத்தீவீரன்ல பண்ணுவாரே அதேதான்!
இந்நிலையில், அந்த வரிசையில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான தப்பாட்டம் படத்தின் மீம் ஒன்றை எக்ஸ் தளத்தின் ஓனர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நிலையில், அந்த படத்தில் நடித்த துரை சுதாகர் ரொம்பவே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து பெரிய போஸ்டரே அடித்து கொண்டாடி பிரஸ் மீட்டும் வைத்துள்ளார்.
உலகளவில் தனது படத்தை எலான் மஸ்க் பிரபலப்படுத்தி விட்டார் என அவர் சந்தோஷத்தில் பேசும் காட்சி பலரையும் சிரிக்க வைத்து வருகிறது. ஹீரோயின் டோனா ரோசாலியா இளநீரை ஸ்ட்ரா போட்டு பருக, அவரது உதட்டில் ஸ்ட்ரா போட்டு துரை சுதாகர் பருகும் அந்த அட்டகாசமான காட்சியை எலான் மஸ்க் ஐபோனிடம் இருந்து ஏஐ டேட்டாக்களை திருடுவதாக பதிவிட்டு இருந்தார். அதை பார்த்து சாமி யாரும் பார்க்காத நம்ம படத்தை புரமோட் பண்ணுது என அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சந்தோஷப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: கல்யாணத்துக்கு போகலனா என்ன?!.. பிரேம்ஜிக்கு பெரியப்பா இளையராஜா செய்த சிறப்பான சம்பவம்!…
இதே உத்வேகத்தில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் துரை சுதாகர் தட்டி பறித்து விடுவாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. தப்பாட்டம் தான் அந்த படத்தின் பெயர் என்றும் அந்த படத்தில் நடித்தவர்கள் இவர்கள் தான் என்பது வெளியே தெரிய வந்ததற்கே எலான் மஸ்க்குக்கு அந்த படக்குழுவினர் கோயில் கட்டி கும்பிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…