×

அந்த அரபிக் கடலோரம்… ஹர்பஜன் சிங் இடத்தை பிடித்த ஜடேஜா!

சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா ஹர்பஜன் போல தமிழில் டிவிட் செய்து ரசிகரகளை குஷியாக்கியுள்ளார்.

 

சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா ஹர்பஜன் போல தமிழில் டிவிட் செய்து ரசிகரகளை குஷியாக்கியுள்ளார்.

ஹர்பஜன் சிங் கடந்த 3 சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் அணியில் இணைந்ததில் இருந்து தமிழில் டிவீட் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் காரணமாக அவர் இப்போது ஒரு தமிழ்ப் படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் இந்த முறை சொந்த காரணங்களுக்காக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அதனால் அவருடைய தமிழ் டிவீட்களை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்நிலையில் சி எஸ் கே அணியில் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா ‘அந்த அரபிக் கடலோரம்… அந்தநாள் ஞாபகம்…2020… களத்தில் சந்திப்போம்.’ எனத் தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதனால் ஹர்பஜன் இடத்தை இப்போது ஜடேஜா பிடித்துக்கொண்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News