×

அந்த மனசு தான் சார் கடவுள்.. இணையத்தை தெறிக்கவிடும் நடிகர் ஆதியின் செயல் - வீடியோ!

நடிகர் ஆதி தன் தந்தைக்கு ஷேவிங் செய்து காசு வாங்கும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் ஷேவிங் செய்துவிட்டு அப்பாவிடம் இருந்து பணம் கேட்கிறார். அப்பாவோ  குறைவான பணத்தை கொடுப்பதால் பேரம் பேசிக்கொண்டே பர்ஸை வாங்கி பணத்தை எடுத்துக்கொள்கிறார்.

 

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. தொடர்ந்து ஈரம், அரவான், ஆடுபுலி, அய்யனார் , மரகத நாணயம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாக்களிலும் கவனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் நடிகர் ஆதி குறித்த செய்திகள் வெளியாகி அவர் மீது மரியாதையை அதிகரித்து வருகிறது சமீபத்தில் அவரது அப்பாவிற்கு ஷேவிங் செய்துவிட்டு காசு வாங்கிய குறும்புத்தனமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அதையடுத்து நடிகை நிக்கி கல்ராணியுடன் காதால் கிசு கிசுக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்ப்போது நடிகர் ஆதி சாலையோரத்தில் இருக்கும் பெரியவர் ஒருவருடன் சண்டை போடும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு "  பெரும்பாலும் நான் வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த மனிதரை பார்ப்பேன். இன்று நான் அவருக்கு வணக்கம் சொன்னேன். உடனே காசு பணம் தேவையில்லை தலைவா உன் அன்புக்கு நான் அடிமை என்று அவர் கூறியதாக' ஆதி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். ஆதியின் இந்த செயல் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News