SCRIPT'ல அந்த சீனே இல்ல…. திடீர்னு முத்தம் கொடுத்த திரிஷா - ஷாக்கான ஸ்டார்!
விடாமுயற்சி திரைப்படம்:
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியாகி ஓரளவுக்கு கலவையான விமர்சனம் பெற்ற திரைப்படம் தான் "விடாமுயற்சி". மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க திரிஷா நடித்திருந்தார்.
இவர்களுடன் அர்ஜுன், ரெஜினா கெசென்ரா மற்றும் ஆரவ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். முன்னதாக இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவரது கதையில் அஜித்துக்கு திருப்தி இல்லாததால் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனி இயக்குனராக பணியமர்த்தி திரைப்படம் எடுத்தனர்.
த்ரிஷாவின் திடீர் முத்தம்:
இந்நிலையில் இந்த திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரசியமான வெளிவராத தகவல் ஒன்று தற்போது கிடைத்திருக்கிறது. அதாவது இந்த திரைப்படத்தில் ஒரு சென்டிமென்ட் காட்சியில் அஜித் மற்றும் திரிஷா நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நடிகை திரிஷா உணர்ச்சிவசப்பட்டு அஜித்தை கட்டியணைத்து முத்தம் இட்டு விட்டாராம்.
ஆனால், அந்த சீன் இந்த ஸ்கிரிப்டிலே இல்லை…. அஜித்தின் நடிப்பை பார்த்து அசந்து போன திரிஷா இந்த இடத்தில் அஜித்தை கட்டியணைத்து முத்தம் கொடுத்தால் இன்னும் இந்த காட்சி சிறப்பாக இருக்கும் ரசிகர்களிடம் சரியான முறையில் சென்றடையும் என எண்ணி திரிஷா இப்படி ஒரு செயலை செய்தாராம். இந்த விஷயம் தற்போது மீண்டும் பேசு பொருளாகியுள்ளது குறிப்பிடுத்தக்கது.
