Categories: Cinema News latest news

பிரகாஷ் ராஜை வைத்து ரிஸ்க் எடுக்க தயாரான வினோத்.! அஜித் படத்தில் அதெல்லாம் நடக்காது.!

இயக்குனர் H.வினோத் இயக்கி, போனிகபூர் தயாரித்து அஜித்குமார் இணையும் 3வது முறையாக கூட்டணி அமைத்துள்ளது. ஆம், AK-61 என தலைப்பு வைக்கப்பட்டுள்ள  இப்படத்தின் ஷூட்டிங்கிற்கான வேலைகள் தொடங்கப்பட்டு பின்னர் மார்ச் 3ஆம் தேதி அஜித்திற்கு உகந்த வியாழக்கிமை அன்று படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகிவில்லை.

இப்படத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை தபு மீண்டும் அஜித்துடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் வில்லனாக நடிகர் பிரகாஷ் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. அட ஆமாங்க…இதற்கு முன்னர் இதற்கு முன்னர்,ஆசை, ராசி உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட 16 வருடம் கழித்து மீண்டும் அஜித் கூட்டணியில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ் ராஜ் தற்போது மொழிகள் கடந்து நடித்து வருகிறார். அவரிடம் தற்போது ஒரு கெட்ட பழக்கம் தொற்றி கொண்டுள்ளதாம். அதாவது, கொடுத்த கால்ஷீட் நாளில் ஒழுங்காக படப்பிடிப்பில் கலந்துகொள்வதில்லையாம். ஆனால், கொடுத்த நாளில் படப்பிடிப்பிற்கு வந்தால் சரியாக நடித்து முடித்துவிடுவாராம்.

இதையும் படியுங்களேன்- அஜித்திற்கு ஜோடியாக இவங்களா?! ஏன் இந்த விபரீத முடிவு.?

அஜித் போன்ற பெரிய நடிகர்கள் படத்தில் இந்த வேலையை பிரகாஷ் ராஜ் காட்ட மாட்டார் என கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றனர். அஜித்துடன் பிரகாஷ் ராஜ், ஆசை, ராசி , பரமசிவன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

Manikandan
Published by
Manikandan