×

அப்படியே சொக்கி போயிட்டேன்...  சூடேற்றும் சுனைனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

இன்ஸ்டாவாசிகளை ஈர்க்கும் சுனைனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

நகுலிற்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை, தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட நேர்த்தியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

நேச்சுரலான நடிகை என பெயரெடுத்த சுனைனா தற்ப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். ஆம்,  டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் "ட்ரிப்" என்ற படத்தில் யோகி பாபுவுடன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது. கொரோனா முடிந்ததும் கோலிவுட் ரிலீஸ் லிஸ்டில் இந்த படமும் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே புரோமோஷன் வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக செம அழகான புகைப்படங்களை வெளியிட்டு 10 வயது குறைந்தார் போல் இன்ஸ்டாவாசிகளை சொக்கவைத்துள்ளார். தற்ப்போது 31 வயதாகும் சுனைனா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். இதற்கிடையில் அவரது நெருங்கிய நண்பர் கழுகு புகழ் கிருஷ்ணாவுடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News