உன் மூஞ்சிய பாத்தாலே அதான் தோணுது!.. தனுஷை கலாய்த்த இயக்குனர்...
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். நடிக்கவந்த புதிதிலேயே காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என காட்டினார். அதன்பின் கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.
வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் நடித்தார். இதில், ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்காக தேசிய விருதும் வாங்கினார். ஒருபக்கம் இயக்குனராகவும் தனுஷ் கலக்கி வருகிறார். அவர் இயக்கி நடித்து வெளியான இட்லி கடை படமும் பேசப்பட்டது.
இந்த படத்திற்கு பின் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மமீதா பைஜூ கதாநாயகியாக நடித்து வருகிறார். ஒருபக்கம் ஹிந்தி படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். தனுஷை வைத்து அட்ராங்கி ரே, ராஞ்சிஹானா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இப்போது தனுஷை வைத்து Tere Ishk Mein என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் வருகிற 28ம் தேதி தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. தனுஷ் நடித்த படங்களில் அவரின் காதல் பிரேக் அப் ஆவது போலவே கதை போகும். Tere Ishk Mein படத்திலும் அதுதான் கதை. இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய தனுஷ் ‘என்னை எப்போதும் ஏன் காதல் தோல்வி கதாபாத்திரங்களிலேயே நடிக்க வைக்கிறீர்கள்?’ என ஆனந்திடம் கேட்டேன்.
அதற்கு அவர் ‘உன் முகத்திலேயே ஒரு பிரேக்கப் மேன் ஃபீல் இருக்கிறது’ என்றார். உடனே போய் கண்ணாடி முன் நின்று பார்த்தேன். எந்த ஆங்கிளிலும் அப்படி தெரியவில்லை என குழப்பமாக இருந்தது’ என பேசியிருக்கிறார்.
