தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்களை வளர்த்துவிட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். நாகேஷில் துவங்கி அவரால் பிரபலமான நடிகர்கள் பலர். பாரதிராஜாவிற்கு பிறகு தமிழில் புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தவர் பாலச்சந்தர்.
பாலச்சந்தரை குறித்து சினிமாவில் பரவலாக ஒரு பேச்சு உண்டு எந்த ஒரு நடிகரையும் பார்த்த முதல் பார்வையிலேயே அவர் எப்படி வருவார் என்பதை பாலச்சந்தரால் கணிக்க முடியும் என பலரும் கூறுவதுண்டு. அப்படியான சில சம்பவங்களும் கூட சினிமாவில் நடந்துள்ளது.
spb
ஆரம்பக்காலம் முதலே எஸ்.பி பாலசுப்பிரமணியமும் பாலச்சந்தரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். இந்த சமயத்தில் ஒரு நாள சில இளைஞர்களை எஸ்.பி.பியிடம் அழைத்து வந்தார் பாலச்சந்தர். அவர்கள் அனைவரும் எஸ்.பி.பியை விடவும் வயது குறைவானவர்களாக இருந்தார்கள்.
பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய நபர்:
அதில் கருப்பு சட்டை, பேண்ட் போட்டுக்கொண்டு ஒரு இளைஞன் நின்றுக்கொண்டிருந்தான். அவனை எஸ்.பி.பியிடம் காட்டிய பாலச்சந்தர் அந்த இளைஞனை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். ஆனால் எஸ்.பி.பிக்கு அந்த இளைஞனை பற்றி ஒன்றுமே தெரியாது. இதற்கு முன்பு அவனை பார்த்தது கூட கிடையாது.
k balachandar
எனவே எஸ்.பி.பி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. மற்ற இளைஞர்கள் போலதான் இவனும் இருக்கிறான் என கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த பாலச்சந்தர் அந்த பையனை நல்லா பார்த்து வச்சிக்கோங்க. தமிழ் சினிமாவை மட்டும் இல்ல. இந்திய சினிமாவையே அவன் ஆள போறான் என கூறினார்.
அந்த இளைஞன் வேறு யாரும் அல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்தான். ரஜினி இந்திய சினிமாவில் பெரும் நடிகராவார் என்பதை முன்பே கணித்தவர் இயக்குனர் பாலச்சந்தர். ஒரு மேடையில் பேசும்போது இந்த விஷயத்தை எஸ்.பி.பி பகிர்ந்திருந்தார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…