Categories: Cinema News latest news throwback stories

சாக கிடந்த எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் என் தாத்தா!.. பேரனுக்கு உதவி செய்த நம்பியார்…

தமிழ் சினிமாவில் உள்ள பழம்பெரும் வில்லன்களில் மிகவும் பெயர் பெற்றவர் நடிகர் நம்பியார். பொதுவாக எம்.ஜி.ஆர் படங்கள் என்றாலே அப்பொழுது அவருக்கு வில்லனாக நம்பியார்தான் நடிப்பார் என்கிற நிலை இருந்தது.

இதனால் கிராமத்தில் இருக்கும் பல மக்களுக்கு நம்பியாரை சுத்தமாக பிடிக்காது. சில நேரங்களில் நம்பியார் எம்.ஜி.ஆருடன் கிராமங்களுக்கு படபிடிப்பிற்கு செல்லும் பொழுது நம்பியாருக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள் என ஒரு முறை நம்பியாரே கூறியிருக்கிறார்.

மக்கள் அனைவரும் நம்பியாரை நிஜமாகவே வில்லன் என நினைக்கும் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியவர் நம்பியார். ஆனால் நிஜ வாழ்க்கையில் நம்பியார் மிகவும் நல்ல குணம் கொண்டவர் தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வந்தவர். ஐயப்பனின் பெரும் பக்தர்.

தன்னம்பிக்கை கொடுத்த நம்பியார்:

வாழ்க்கையின் பெரும் பிரச்சனைகளைக் கூட எளிதாக கடந்து வந்தவர் நம்பியார். அதை குறித்து அவரது பேரன் தீபக் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஒருமுறை தீபக்கிற்கு கடுமையான விபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் கை கால் எலும்புகள் உடைந்து எழுந்திருக்கவே முடியாத நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

இந்த நிலையில் அவரது குடும்பமே மிகவும் சோகத்தில் ஆழ்ந்து விட்டது அப்போது கூட அவரிடம் பேசிய நம்பியார் உன்னால் திரும்ப சகஜ நிலைக்கு வர முடியும். எதையும் நினைத்து மனதை விட்டு விடாதே என்று ஆறுதல் கூறி அவருக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளார். அதனால்தான் திரும்ப நான் நடந்தேன் என அவரே அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Published by
Rajkumar