×

அந்த நடிகரே சொல்லிட்டாரு.. விஜய் ஒரு நடிகரே கிடையாது.. மீராமிதுன் டிவிட்....

நடிகை மீரா மிதுன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார்.
 

நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார். அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே கண்டித்தனர். ஆனாலும், அவர் திருந்தியபாடில்லை.

இந்நிலையில், மீராமிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மலையாள நடிகர் சித்திக் ஒரு பேட்டியில் ‘விஜய் ஒரு  ஸ்டாராக இருக்கலாம். ஆனால், அவர் சிறந்த நடிகர் இல்லை’ எனக்கூறியிருந்தார்.     300 திரைப்படங்களில் நடித்த ஒரு அனுபமுள்ள நடிகர் கூறிய தங்கமான வார்த்தைகள் அது’ என அவர் பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்தி வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News