என் பேரை கேட்ட அஜித்.. இப்படி சொல்லுவாருனு நினைக்கல.. விடாமுயற்சி பட நடிகர் பகிர்ந்த சீக்ரெட்

பிரம்மாண்ட ரிலீஸ்: நேற்று அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகி தற்போது வரை கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை பார்க்காத அஜித்தை இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள் என்று தான் பலபேரின் கருத்தாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார் .மேலும் அர்ஜுன் ,ஆரவ் ,ரெஜினா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத் .ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ். லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்து இருக்கிறது.
ஏமாற்றத்தை கொடுத்த அஜித்:படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல பேட்டிகளில் அஜித்தை பற்றியும் விடாமுயற்சி திரைப்படத்தை பற்றியும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து இருந்தார் மகிழ்திருமேனி. அதில் மிகவும் பேசப்பட்ட ஒரு செய்தி என்னவெனில் இந்த படத்தில் அஜித்துக்கு மாஸ் இருக்காது, ஆக்சன் இருக்காது ,ஓப்பனிங் சீன் இருக்காது, சாதாரணமாகத்தான் அஜித்தை இதில் காட்டியிருப்போம் என கூறி இருந்தார். அவர் சொன்னதைப் போல இந்த படத்தில் அப்படித்தான் அஜித்தை காட்டி இருக்கிறார்கள் .அது அஜித் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் .ஆனால் மற்ற ரசிகர்கள் அதை ஒரு நெகட்டிவ்வாகவே பேசிக்கொண்டு வருகிறார்கள் .
வில்லன் ரோல்: இதுதான் இந்த படத்திற்கு மைனஸ் என்றும் கூறி வருகிறார்கள் .இந்த நிலையில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கணேஷ் சரவணன். இவர் ராவணக்கோட்டம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர். விடாமுயற்சி படத்தில் வில்லன் ரோலில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலில் அஜித்தை பார்க்கும் பொழுது தன்னை சஞ்சய் என அறிமுகம் செய்து கொண்டாராம். அஜித்தும் கை கொடுத்துவிட்டு அவர் ஷாட்டுக்கு நடிக்க போய்விட்டாராம் .சிறிது நேரம் கழித்து அஜித் அழைப்பதாக கணேஷ் சரவணனிடம் வந்து உதவியாளர் சொல்ல கணேஷ் சரவணன் அங்கு போயிருக்கிறார்.
சாஸ்திரமான வரவேற்பு: உடனே காரில் ஏறச் சொல்லி கேரவனுக்கு அழைத்து கொண்டு போனாராம் அஜித் .கேரவனுக்குள் போனதும் முதலில் கணேஷ் சரவணனுக்கு தண்ணீர் கொடுத்து வரவேற்றாராம் அஜித். அதன் பிறகு இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க கணேஷ் சரவணன் குடும்பத்தை பற்றியும் அவருடைய அப்பா அம்மாவை பற்றியும் விசாரித்து இருக்கிறார் அஜித். உண்மையான பெயரே சஞ்சய் தானா என கேட்டிருக்கிறார். அதுவரை அஜித்துக்கு அவர் பெயர் கணேஷ் சரவணன் என தெரியாது. என்னுடைய பெயர் கணேஷ் சரவணன் .சினிமாவுக்காக சஞ்சய் என மாற்றி இருக்கிறேன் என கூறினாராம்.
பெற்றோருக்கு மரியாதை: அதன் பிறகு அஜித் கணேஷ் சரவணன் என்ற பெயர் எப்படி வைத்தார்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு அவர் மூத்த குழந்தை பெண் பிள்ளை. அதன் பிறகும் பெண் பிள்ளை பிறந்து விடக்கூடாது என்பதற்காக அருகில் இருந்த விநாயகர் கோயிலில் தினமும் என் பெற்றோர் வழிபட்டு வந்தார்கள். அதன் பிறகு நான் பிறந்தேன். அதனால் விநாயகர் நினைவாக என்னுடைய அம்மா எனக்கு கணேஷ் சரவணன் என பெயர் வைத்தார் என சொன்னாராம்.
உடனே அஜித் உன்னுடைய அம்மா ஆசையினால் தான் இந்த பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதையே நீ மாற்றி விட்டால் அம்மாவுக்கு நீ மரியாதை கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம். ஒரு வேளை நீ சினிமாவில் இன்னும் ஒரு நிலையான இடத்தை அடையாமல் போனதற்கு இது கூட காரணமாக இருந்திருக்கலாம். அதனால் கணேஷ் சரவணன் என்ற பெயரே இருக்கட்டும் எனக் கூறி அஜித் அவரை கணேஷ் என்று தான் அழைத்து வந்தாராம். இதை கணேஷ் சரவணன் அந்த பேட்டியில் கூறினார்