×

கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி செய்த நடிகர்… அவர் பெயரின் ஆன்லைனில் மோசடி!

பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் பெயரில் ஆன்லைனில் சிலர் பணமோசரி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் பெயரில் ஆன்லைனில் சிலர் பணமோசரி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனாவால் இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து வசதிகளை செய்துகொடுத்தார் பாலிவுட் நடிகர் சோனு சூட். அதுமட்டுமில்லாமல் கொரோனாவால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கும் உதவிகளை செய்துள்ளார். அதனால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் அவரின் பெயரைப் பயன்படுத்தில் சிலர் ஆன்லைனில் மோசடி செய்துள்ளனர்.

சோனு சூட் பெயரில் போலி ஆன்லைன் இணையதளம் உருவாக்கி, அதில் உதவி வேண்டுமென்றால் பிராஸஸிங் கட்டணமாக ரூ 1700 கட்ட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதை நம்பி பலரும் அதில் இருந்த வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சோனு சூட்டின் நண்பர் விஷால் மும்பை போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News