×

தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்ட நடிகை!

விஷால் நடித்த சிவப்பதிகாரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மம்தா மோகன்தாஸ். அதன் பிறகு குரு என் ஆளு, தடையற தாக்க போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
 


அவர் ஆரம்ப காலத்தில் நடிகையாக ஜெயிக்க அதிகம் போராடினார். பல படங்களுக்கு பின்பு தான் மலையாள ரசிகர்கள் அவர் நடிப்பை பாராட்ட துவங்கினர்.

தற்போது கைவசம் இரண்டு தமிழ் படங்கள் உட்பட நான்கு படங்கள் வைத்திருக்கிறார் மம்தா மோகன்தாஸ். இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதில் 'Self-ie Quarantined' என குறிப்பிட்டு மாஸ்க் அணிந்திருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் அவர்.

தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News