மொத்த வித்தையையும் இறக்கிய லிங்குசாமியையே கவுத்த நடிகை... என்ன சேதி தெரியுமா?

தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கும் உப்பன்னா படத்தின் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி, கோலிவுட் இயக்குனர் லிங்குசாமியின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
மும்பைப் பொண்ணு கீர்த்தி ஷெட்டி, உப்பன்னா சக்ஸஸால் நெகிழ்ந்து போயிருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த இந்தப் படத்தில் அவரது மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் படம் கொடிகட்டிப் பறக்கிறது. படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே கீர்த்தி ஷெட்டி அடுத்த படத்துக்கான ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார். ராகுல் சங்கிரிதியன் இயக்கும் ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நானி மற்றும் சாய் பல்லவி ஆகியோருடன் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடிக்கிறார்.
இந்தநிலையில், கீர்த்தி ஷெட்டிக்கு அடுத்த பட வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. கோலிவுட் இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் நேரடியாக இயக்க இருக்கும் முதல் படத்தில் இளம் ஹீரோ ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். உப்பன்னா படத்தில் கீர்த்தி ஷெட்டியின் நடிப்பு இயக்குனர் லிங்குசாமியைக் கவர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.