×

பாஜகவில் இருந்து விலகிய நடிகை – காரணம் இதுதான் !

பாஜகவில் 7 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்து சின்னத்திரை நடிகை சுபத்ரா முகர்ஜி இப்போது கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

 

பாஜகவில் 7 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்து சின்னத்திரை நடிகை சுபத்ரா முகர்ஜி இப்போது கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகையான சுபத்ரா முகர்ஜி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். பாஜகவுக்காக தீவிரமாக இயங்கிய இவர் இப்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதற்குக் காரணம் டெல்லியில் நடந்த கலவரம்தான். ஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதே வன்முறைக்குக் காரணம் என சொல்லப்படும் நிலையில் அவர்களுக்கும் டெல்லி கலவரத்துக்கும் சுபத்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

அவர்கள் மேல் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிய அவர் கட்சியில் இருக்க விருப்பமில்லை எனக் கூறி, பாஜகவிலிருந்து விலகியுள்ளார். இந்த சம்பவமானது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News