Categories: Cinema News latest news throwback stories

எனக்கு பிடிக்கல!.. முகத்துக்கெதிராக சொன்ன எம்.எஸ்.வி..

ஒரு படத்தில் ஒரு பாடல் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை பதிவு செய்கிறது என்றால் நிச்சயமாக அந்தப் பாடலுக்கு பின்னாடி ஏதாவது பெரிய பிரச்சினை கிளம்பியிருக்கும். இது இப்பொழுது என்று இல்லை, காலங்காலமாக நடந்து வரும் உண்மை.

mgr1

பிரச்சினை இல்லாமல் எந்த ஒரு செயலும் வெற்றியடையாது. இந்த கூற்றுக்கு ஏற்ற மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ப. நீலகண்டன் இயக்கத்தில் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வெளியான படம் ‘ஒருதாய் மக்கள்’. இந்த படத்தில் எம்ஜிஆர், முத்துராமன், ஜெயலலிதா போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க : முக்கிய விஷயத்தை மறைத்த வாலி!.. கடுப்பான எம்.ஜி.ஆர்.. பிரச்சனையை முடித்து வைத்த பாடல்…

படத்திற்கு எம்.எஸ்.வி இசையமைக்க வாலி பாடல் வரிகளை எழுதினார். இந்த படத்தில் எம்ஜிஆரும் முத்துராமன் இரட்டை பிள்ளைகள். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவை காதலிக்க யார் காதல் உயர்ந்தது என்பதை நிரூபிக்க ஒரு பாடல் மூலம் விளக்கமளித்திருப்பார் இயக்குனர். அந்த பாடல் ‘பாடினாள் ஒரு பாட்டு’ என்ற பாடல்.

msv

அந்த பாடலில் முத்துராமனுக்கும் எம்ஜிஆரும் போட்டியா? இல்லை ஜெயலலிதா யர் காதலை ஏற்றுக் கொள்வார் ? என்பது மாதிரிதான் ரசிகர்களின் பார்வை இருக்கும். ஆனால் உண்மையிலேயே அந்த பாடலில் எம்.எஸ்.விக்கும் ஜெயலலிதாவிற்கும் தான் போட்டி. ஏனெனில் நான் எப்படியெல்லாம் இசை போட்டிருக்கிறேன், துணிச்சல் இருந்தால் ஆடு என்பது மாதிரி வெவ்வேறான மெட்டுகள் போட்டிருப்பார் எம்.எஸ்.வி.

ஆனாலும் சளைக்காமல் வெஸ்டர்ன், பரதம், குத்து என அனைத்து வித நடனத்தையும் ஆடி அசத்தியிருப்பார் ஜெயலலிதா. அதனாலேயே இன்றளவும் அந்த பாடல் பேசப்பட்டு வருகிறது. அந்த பாடக் கம்போஸ் நேரத்தில் எம்.எஸ்.வி மெட்டை போட வாலியை பாடச் சொல்லியிருக்கிறார் நீலகண்டன்.

msv vaali

வாலியும் பாடினாள் ஒரு பாட்டு என்று பாடியிருக்கிறார். இதைக் கேட்டதும் எம்.எஸ்.விக்குப் பிடிக்கவில்லையாம். வேற வரிகள் இருந்தால் போடும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் வாலி ஏன் இந்த வரிகளுக்கு என்ன? என கேட்க பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை.

பேசாமல் வேற பாடு என்று சொல்லியிருக்கிறார். மேலும் அங்கு இருந்த நீலகண்டன், வீனஸ் கிருஷ்ணமூர்த்தி இவர்கள் எல்லாருக்கும் பிடித்தும் எம்.எஸ்.வி கேட்கவில்லை. அதன்பின் இதற்கு சரியான ஆளு புரட்சித்தலைவர் தான் என்று அவரிடம் போட்டுக் காட்டியிருக்கின்றனர். அவரும் இந்த வரி நன்றாகத் தானே இருக்கின்றது. இதுவே இருக்கட்டும் என்று சொன்ன பிறகு தான் எம்.எஸ்.வி அமைதியானாராம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini