Categories: latest news throwback stories

எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர்!.. தொடர்ந்திருந்தால் என்னவாயிருக்கும்?.. கப்சிப்பான திரையுலகம்!..

தமிழ் சினிமாவில் அந்தக் காலகட்டத்தில் எப்படி சிவாஜியும் எம்ஜிஆரும் கொடிகட்டி பறந்தார்களோ அதே போலவே இயக்குனர் ஸ்ரீதரும் தன் படைக்கும் திறமையால் மக்களிடம் நன் மதிப்பை பெற்று வந்தார். நடிகர்களுக்கு இருந்த பலவாறான ரசிகர் கூட்டம் ஸ்ரீதருக்கும் இருந்தது.

sivaji mgr

இவர் சிவாஜி மீது அலாதி அன்பும் கொண்டவர். ஒரு சமயம் சிவாஜியை வைத்து ஸ்ரீவள்ளி என்ற பெயரில் படத்தை எடுக்க முயற்சித்தார். வள்ளியாக பத்மினியையும் முருகராக சிவாஜியையும் நடிக்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.அந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குனர் டி,ஆர்.ராமண்ணாவிடம் வழங்க முடுவு எடுத்தார்.

அதன் பின்னர் சிவாஜியிடம் இந்தக் கதையை பற்றி கூற ஏற்கெனவே வேறொரு நிறுவனம் இதே ஸ்ரீவள்ளி கதையை தன்னிடம் கூறி படத்தில் நடிக்க ஒப்பந்தம் பெற்றுக் கொண்டதை ஸ்ரீதரிடம் சிவாஜி கூறினார். சரி என்று சிவாஜியின் வீட்டில் இருந்து கிளம்பி திரும்பும் நேரத்தில் திடீரென ஒரு அமெரிக்க நாவல் கதையை அப்படியே தமிழில் எடுக்க திடீர் யோசனை பிறந்தது ஸ்ரீதருக்கு.

sivaji2

அது தான் உத்தமபுத்திரன் திரைப்படம். இந்தப் படத்தில் சிவாஜிக்கு இரட்டை வேடம். இதை மீண்டும் சிவாஜியிடம் கூற சிவாஜி சம்மதித்து விட்டார். இந்தப் படத்தை யாரை வைத்து இயக்கலாம் என்று யோசிக்கும் நேரத்தில் பிரகாஷ ராவ் மனதிற்குள் வந்தார். உடனே அவரிடம் போய் இந்தக் கதையை கூற அவர் ஷாக் ஆகிற மாதிரி ஒரு தகவலை கூறினார்.

அதாவது இதே கதையை என்னிடம் வேறொரு நிறுவனம் சொல்லியிருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு தான் இந்தக் கதையை நான் இயக்கப் போகிறேன் என்று கூற ஸ்ரீதருக்கு பயங்கர அதிர்ச்சி. ஸ்ரீவள்ளி கதையும் இப்படி தான் போனது, இப்போது உத்தமபுத்திரன் கதைக்கும் அதே நிலைமையா? என்று யோசித்தார்.

இருந்தாலும் படத்தில் சிவாஜி நடிக்கிறார் என்றால் பிரகாஷ ராவ் நம் வழிக்கு வந்து விடுவார் என்று நினைத்து ‘இந்தப் படத்தில் யார் நடிக்கிறார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள், சிவாஜி நடிக்கிறார்’ என்று சொல்ல அதற்கு பிரகாஷ ராவ் நான் இயக்கப் போகும் படத்தில் யார் நடிக்க போகிறார் என்று தெரிந்தால் நீங்களூம் ஆச்சரியப்படுவீர்கள் என்று எம்ஜிஆர் பெயரை சொல்ல ஸ்ரீதர் வந்த வழியே நடையை கட்டினார்.

mgr nsk

இருந்தாலும் உத்தமபுத்திரன் படத்திற்காக ஸ்கிரிப்ட் எல்லாம் ஸ்ரீதர் முடித்து விட்டதால் எது எப்படியோ இந்தப் படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று மறுநாள் தினத்தந்தி பத்திரிக்கையில் சிவாஜியின் புகைப்படத்தோடு உத்தமபுத்திரன் படத்திற்கான விளம்பரத்தை போட்டார். அதே வேளையில் எம்ஜிஆரும் அதே உத்தமபுத்திரன் விளம்பரத்திற்காக அவருடைய புகைப்படத்தோடு விளம்பரப்படுத்தினார்.

இதையும் படிங்க : அட்வான்ஸ் கொடுக்க கூட பணம் இல்ல!.. படமோ சூப்பர் ஹிட்!… இது எப்படி சாத்தியம்?..

இதை கவனித்துக் கொண்டிருந்த திரையுலகம் இருவருக்குள்ளும் இருக்கும் இந்த போட்டி எங்கு போய் முடிய போகிறதோ என்ற பீதியில் இருக்க என்.எஸ்.கே. தலையிட்டு எம்ஜிஆரிடம் ஸ்ரீதர் தான் ஏற்கெனவே மாடர்ன் தியேட்டர்ஸிடம் இருந்து உரிமையை வாங்கி வைத்திருக்கிறாரே? அப்புறம் என்ன? அவரே அந்த படத்தை எடுக்கட்டும்,

நீ வேறொரு படத்தை எடுத்துக் கொள் என்று சொல்லி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் விளைவாக எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் கலக்கிய படம் தான் நாடோடி மன்னன் திரைப்படம்.

Published by
Rohini