மண் வாசனை நுகரச்சென்ற இயக்குனர் இமயம் - வரலாறு பேசும் வாழ்க்கை!

 
bharthi raja

இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல் நல குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த திரைத்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவரது ரசிகர்கள் பலரும் பெரும் சோகத்தில் உள்ளனர். இப்படிப்பட்ட சமயத்தில் மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு பற்றியும் அவரது பல அத்தியாய திருப்பங்களை பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் 

தேனி மாவட்டத்தில் அல்லிநகரம் பெரிய மாயத்தேவர் - மீனாட்சி அம்மாளுக்கு 1941 ஆம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தை தான் பாரதிராஜா. இவரது இயற்பெயர் சின்னசாமி. படிக்கும்போதே நாடகங்கள் பார்த்து வளர்ந்த பாரதிராஜாவுக்கு நாடகங்கள் எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்தது .

ஆரம்பத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை கிடைக்க ஊர் ஊராக சென்று மக்களிடம் நோய் பற்றி விசாரித்து ரிப்போர்ட் செய்கிற வேலையை செய்து வந்தார். அப்படி ஒரு முறை பண்ணையபுரம் சென்றபோது அங்கு இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கரன் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க அவர்கள் மூவருடன் நண்பரானார் பாரதிராஜா .

bharahi raja

அதன் பிறகு மூவரோடு சேர்ந்து நாடகங்கள் அரங்கேற்றி கதை எழுதி அந்தக் கதைக்கு இளையராஜா கங்கை அமரன் உள்ளிட்டோர் இசை வாசித்து வந்தார்கள். இப்படித்தான் ஊர் சிரிக்கிறது, சும்மா ஒரு கதை போன்ற நாடகங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படி ஒரு சமயத்தில் இளையராஜா தன்னுடைய நண்பர்கள் மூவருடன் புறப்பட்டு சென்னைக்கு வந்தார் .

மூவரும் சேர்ந்து சங்கிலி முருகன் நடத்திய நாடகங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்தார்கள். இது தவிர இசைக்கச்சேரி நடத்தவும் சென்றார்கள். இசை கச்சேரியில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாட வந்தார். பின்னர்  எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் நட்பு வர்த்தாரத்தில் சேர்ந்து கொண்டார்.

அதன் பிறகு திரைப்படத்துறையில் பணியாற்றும் வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு கிடைக்க ஆரம்பித்தது. இருளும் ஒளியும் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பாரதிராஜா பணியாற்றினார். அதை அடுத்து தலை பிரசவம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் .

தொடர்ந்து பாரதிராஜாவின் திறமையை பார்த்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்புகளை வழங்க தொடங்கினார்கள்.  மயிலு என்ற கதையை பாரதிராஜா உருவாக்க அதற்கு 16 வயதிலே என பெயர் வைத்துக் கமல், ரஜினி, சத்யஜித், ஸ்ரீதேவி, காந்திமதி நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. அமோக வரவேற்பை பெற்ற அந்த திரைப்படம் பாரதிராஜாவுக்கு பெயரும் புகழும் பெற்றுக் கொடுத்தது .

bharathiraja

முதல் திரைப்படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசு விருது பெற்றார் பாரதிராஜா. ஸ்டுடியோவுக்கு உள்ளே நடந்த சினிமாவை கிராமத்திற்கு அழைத்துச் சென்று மண்வாசனை உடன் படத்தை எடுத்துக் கொடுத்து பெருமை படைத்தவர் பாரதிராஜா

அதுமட்டுமில்லாமல் கதாநாயகன் என்றால் அழகானவன் என்பதை மாற்றி நாயகனுக்கு கோவணம் கட்டி வெத்தலை சொத்தப்பும் சப்பாணியாக மாற்றி வித்தியாசமான கண்ணோட்டத்தில் திரைப்படங்களை ரசிக்க வைத்தவர் பாரதிராஜா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி இயக்குனர் இமயமாக பார்க்கப்பட்டு வந்த பாரதிராஜா திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரமும் சிறப்பு தோற்றங்களையும் ஏற்று நடித்து வளரும் இளைய தலைமுறைகளுக்கு பெருமை சேர்த்தவர்.

இந்நிலையில் இன்று உடல் நலக்குறைவால் என்ற பாரதிராஜா தன்னுடைய 84 ஆவது வயதில் காலமாகி  இருக்கிறார். அவருக்கு திரை துறையை சேர்ந்த பல நட்சத்திர பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை நேரில் சென்று தெரிவித்து வருகிறார்கள். மீண்டும் ஒரு இயக்குனர் இமயத்தை தமிழ் சினிமாவே கனவு கண்டாலும் கூட கண்டெடுக்க முடியாத நிலையில்தான் தன்னுடைய படைப்பை விட்டு சென்றிருக்கிறார் பாரதிராஜா. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

Tags

From Around the web