×

கொரோனாவில் இருந்து மீண்டார் அந்த பந்துவீச்சாளர் – சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சி எஸ் கே அணியைச் சேர்ந்த தீபக் சஹார் முழுமையாக குணமடைந்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சி எஸ் கே அணியைச் சேர்ந்த தீபக் சஹார் முழுமையாக குணமடைந்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக துபாயில் நடக்க உள்ளனர். இதற்காக அனைத்து அணி வீரரகளும் துபாய்க்கு சென்று தனி விமானங்களில் சென்று தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து சென்ற அனைவருக்கும் அரபு நாட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் சிஎஸ்கே பந்து வீச்சாளரான தீபக் சஹாரும் ஒருவர். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். 10 நாட்களுக்கும் மேலான சிகிச்சையில் இப்போது அவர் முழுமையாக குணமாகியுள்ளார்.

அவருக்கு எடுக்கப்பட்ட கடைசி இரண்டு சோதனைகளிலும் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News