×

தம்பி மனைவியையும் விட்டு வைக்கவில்லை - மனைவி எடுத்த பகீர் முடிவு
 

தனது தம்பி மனைவியிடம் பாலியல் சில்மிஷம் செய்த கணவனை, கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள மூக்கனூர் பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ்குமார்(34). இவர் கடந்த 4ம் தேதி அதேபகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் பிணமாக கிடந்தார். அவரின் தலையில் ரத்த காயம் இருந்தது.

தனது கணவரின் மரணம் தொடர்பாக அவரின் மனைவி நித்யா புகார் அளித்தார்.  ஆனால், அவரது பேச்சில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்தான் அந்த கொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. 

அவர் அளித்த வாக்குமூலத்தில் ‘என் கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. வீட்டு செலவுக்கும் பணம் தரமாட்டார். என் தம்பி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனால், நானும் என் தம்பியும் அவர் மீது கோபத்தில் இருந்தோம். மேலும், என் தம்பியின் நண்பர் மேஸ்திரி கணபதியுடன் எனக்கு கள்ள உறவு ஏற்பட்டது.

எனவே, எல்லோருக்கும் தொல்லையாக இருக்கும் என் கணவரை கொலை செய்வது என முடிவெடுத்தோம். ஒருமுறை மதுவில் விஷம் கலந்து கொடுத்தோம். ஆனால், அவர் இறக்கவில்லை. அதன் பின்னரும் தொடர்ந்து என் தம்பியின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். எனவே, அவரை கொலை செய்வது என நாங்கள் அனைவரும் முடிவெடுத்தோம்.


அதன்படி கடந்த 4ம் தேதி அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தோம். ஆனால் அப்போதும் அவர் இறக்கவில்லை. எனவே, என் தம்பி அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தான் என வாக்குமூலம் அளித்தார்.

எனவே, போலீசார் நித்யா  மற்றும் அவரின் தம்பியை கைது செய்தனர். மேலும், தலைமறைவான கணபதியையும் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News