×

மனைவியைக் கொன்று 300 டிபன் பாக்ஸ்களில் அடைத்த கொடூரன் - மருத்துவரின் குரூரச் செயல்

ஒடிசாவில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவியைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி 300 டிபன் பாக்ஸ்களில் அடைத்த கணவனுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

ஒடிசாவில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவியைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி 300 டிபன் பாக்ஸ்களில் அடைத்த கணவனுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் மருத்துவர் சோம்நாத் பரிதா(78). இவரது மனைவி உஷாஸ்ரீ சமல். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு உஷாஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியாதததால் வெளிநாட்டில் இருக்கும் அவரது மகன்கள் உஷாவின் சகோதரரை வீட்டுக்கு சென்று பார்க்க சொல்லியுள்ளனர்.

அப்போது அவர் அங்கு செல்ல உஷாவை அவரது கணவரான மருத்துவரேக் கொலை செய்து உடலைப் பல துண்டுகளாக ஆக்கி அதனை 300 டிபன்பாக்ஸ்களில் தனித்தனியாக அடைத்து வைத்துள்ளார். அவற்றில் இருந்து துர்நற்றம் வீசாமல் இருக்க பினாயிலை நிரப்பி வைத்துள்ளார். இதையடுத்து போலிஸாருக்கு தகவல் சொல்ல அவர்கள் சோம்நாத்தைக் கைது செய்தனர்.

இது சம்மந்தமான வழக்கு 6 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இப்போது குர்தா மாவட்ட நீதிமன்றம் சோம்நாத்துக்கு ஆயுள் தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News