×

கணவனின் கையாலாகாததனம் – மனைவி மற்றும் மகனின் உயிரைக் குடித்த கொடூரம் !

உத்தர பிரதேச மாநிலத்தில் சிற்றுண்டி கடை வைத்திருந்த நபர் கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகனைக் கொலை செய்துள்ளார்.

 

உத்தர பிரதேச மாநிலத்தில் சிற்றுண்டி கடை வைத்திருந்த நபர் கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகனைக் கொலை செய்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷால். இவருக்கு ஹிமானி என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு ஆண்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு ஹோலி பண்டிகைக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இவர்களது குடும்பம் மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களின் வீட்டினுள் சென்று பார்த்தபோது மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் மூன்று உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

விசாரணையில் விஷால் தான் நடத்தி வந்த சிற்றுண்டி உணவகத்தொழிலில் நஷ்டம் அடைந்ததாகவும் அதனால் இந்த முடிவை எடுத்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News