Categories: Cinema News latest news throwback stories

சென்னைக்கு வா நான் பாத்துக்குறேன்… பாரதிராஜா பேச்சை கேட்டு மோசம் போன பிரபலம்!..

எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் புதிதாக அறிமுகமாக துவங்கினார். அதன் பிறகுதான் இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா போன்ற பலரும் சினிமாவில் அறிமுகமாக துவங்கினார்.

அடுத்த தலைமுறை சினிமாவும் துவங்கியது. அப்போது முதலே தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. 16 வயதினிலே திரைப்படத்திற்கு பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற்றார். கொஞ்ச காலங்களிலேயே பாரதிராஜா பெரும் இயக்குனரானார்.

Bharathiraja

அவ்வளவு பெரிய இயக்குனர் ஆனாலும் மிகவும் தன்னடக்கத்துடன் இருந்தவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் பலருக்கு இவர் வாய்ப்பளித்துள்ளார். வைரமுத்துவில் துவங்கி நடிகை ரேவதி, இயக்குனர் பாக்கியராஜ் என பலரையும் பாரதிராஜாதான் அறிமுகப்படுத்தினார்.

அப்போது இளைஞர்கள் பலரும் பாரதிராஜாவிடம் சேர வேண்டும் என்றே ஆசைப்பட்டனர். 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே கவிதைகளின் மீது பெரும் ஆர்வம் கொண்ட கவிஞர் அருண் பாரதி, அப்போதே பாரதி ராஜாவிடம் சேர வேண்டும் என ஆசைப்பட்டார்.

கவிஞருக்கு நடந்த கஷ்டம்:

எனவே அவர் பாரதிராஜா போன் நம்பரை கண்டறிந்து அவருக்கு போன் செய்தார். அவரிடம் பேசிய பாரதிராஜா. விவரங்களை கேட்டுவிட்டு பிறகு “முதலில் பள்ளி படிப்பை முடி.. அதற்கு பிறகு சென்னைக்கு வா, பார்க்கலாம்” என கூறியுள்ளார்.

அதன்படி அருண்பாரதியும் படிப்பை முடித்தப்பிறகு சென்னைக்கு வந்துள்ளார். ஆனால் அவர் வந்த சமயம் பாரதிராஜா ஊரில் இல்லை. அவர் வர இரண்டு மாதம் ஆகும் என கூறிவிட்டனர். அதன் பிறகு சின்ன பெட்டி கடைகளில் எல்லாம் பணிப்புரிந்து சினிமாவில் வாய்ப்பை பெற்றுள்ளார் அருண் பாரதி.

ஒரு பேட்டியில் கூறும்போது வாய்ப்பு தருகிறார்கள் என்றெல்லாம் சினிமாவிற்கு வந்துவிடக்கூடாது. நாம் திரையில் பார்க்கும் சினிமாவிற்கும் நிஜ சினிமாவிற்கும் இடையே நிறைய வேறுபாடு உண்டு என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:இவரா காதல் மன்னன்?!.. ஜெமினி கணேசனை பார்த்து முகம் சுழித்த சரோஜா தேவி….

Published by
Rajkumar