×

வேல்முருகனுக்கும் சுரேஷ் சக்ரவர்த்திக்கும் மோதல் - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ரியோ மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

எப்போதும் மக்கள் தான் யார் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். இம்முறை எலிமினேஷனில் பங்கு கொள்ளப் போகும் போட்டியாளர்கள் தங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கின்றனர். 

ஆனால் அது அவர்களைப் பாதுகாப்பதற்காகவா அல்லது வெளியேற்றுவதற்காக என்பது புரோமோவில்  சரியாக தெரியவில்லை. அதிலும் ஷிவானி வெளியேறுவது போல் இருக்கிறது. எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும்  இந்த புதிய நடைமுறை மக்களுக்குத் திருப்தியளிக்குமா என்பது சந்தேகம் அளிக்கிறது. இது தொடர்பான புரமோ வீடியோ இன்று காலை வெளியானது.

இந்நிலையில், வேல்முருகனும், சுரேஷ் சக்ரவர்த்தியும் மோதிக்கொள்ளும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சனம் ஷெட்டி, ரியோ ராஜ் என தொடர்ந்து எல்லோரிடமும் சண்டை போட்டு வரும் சுரேஷ் தற்போது வேல்முருகனுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News