×

பிணவறையில் இருந்த உடலுக்கு ஏற்பட்ட நிலைமை… ஒரு எலியால் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கள்ளக்குறிச்சி அருகே உடல் கூறாய்விற்காக வைக்கப்பட்டு இருந்த உடலை எலிக் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி அருகே உடல் கூறாய்விற்காக வைக்கப்பட்டு இருந்த உடலை எலிக் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆயந்தூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் ஆறுமுகம். இவர் பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை அடுத்து அவரது உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அடுத்த நாள் நடக்க உள்ள பிணக்கூறாய்வுக்காக அங்கிருக்கும் பிணக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது.

மறுநாள் அந்த உடலை எடுக்க வந்த போது அவர் கால் கட்டை விரல் உள்ளிட்ட பல பகுதிகளில் எலிக் கடித்து குதறியிருந்தது. மருத்துவமனை ஊழியர்களும், ஆறுமுகத்தின் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதற்குக் காரணம் பிணவறை ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்பதே என சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி அறிந்த மனித உரிமைகள் ஆணையம் சுகாதாரத்துறை இயக்குனருக்கு இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News