×

கோழைத்தனமான செயல் – விராட் கோலி கண்டனம்!

கேரளாவில் யானை ஒன்றுக்கு அண்ணாசி பழத்தில் வெடி வைத்துக் கொடுத்து கொலை செய்த சம்பவம் குறித்து விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

கேரளாவில் யானை ஒன்றுக்கு அண்ணாசி பழத்தில் வெடி வைத்துக் கொடுத்து கொலை செய்த சம்பவம் குறித்து விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் மலப்புரம் பகுதியில் ஊர்ப்பகுதிக்குள் வந்த யானை ஒன்றுக்கு அண்ணாசி பழத்தில் வெடியை வைத்து சில விஷமிகள் கொடுத்துள்ளனர். இதை சாப்பிட்ட போது வெடி வெடித்து யானை உயிருக்குப் போராடி இறந்தது. மேலும் யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்தது.

இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ‘கேரளாவில் நடந்ததை அறியும் போது அதிர்ச்சியளிக்கிறது. நாம் விலங்குகளை அன்போடு நடத்துவோம். இதுபோல கோழைத்தனமான செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ எனக் கூறியுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News