×

இத்தனை பேர் இருந்தும் படுதோல்வி அடைந்த தர்பார் : எங்கு தெரியுமா ?

தர்பார் திரைப்படம் ஹிந்தியில் படுதோல்வி அடைந்துள்ளதாக பாலிவுட் விநியோகஸ்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

தர்பார் திரைப்படம் ஹிந்தியில் படுதோல்வி அடைந்துள்ளதாக பாலிவுட் விநியோகஸ்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த தர்பார் திரைப்படம் பிரம்மாண்டமாக ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகி முதல் நாள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் அதன் பிறகு வசூல் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அதிருப்தியில் இருக்க அவர்களை மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக பைரஸி பிரச்சனை எழும்பியுள்ளது.

விமர்சனங்கள் எழுந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற திரையுலங்களில் சராசரியான வருவாய் வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியிலோ படம் மரண அடி வாங்கியிருப்பதாக அங்குள்ள விநியோகஸ்தர்கள் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ரஜினி, ஏ ஆர் முருகதாஸ் மற்றும் வில்லன் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் வட இந்திய மக்களுக்கு நல்ல அறிமுகம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.

இதுவரை 6 கோடிக்கும் கம்மியாக தர்பார் வட இந்தியாவில் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அக்‌ஷய் குமாரின் புதுப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதும் தர்பார் தோல்விக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News