×

பாரதிராஜாவை அப்படி பேசியிருக்கக் கூடாது - மன்னிப்பு கேட்ட இயக்குனர்
 

 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் தற்போது ‘இரண்டாம் குத்து; படத்தை இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசர் வீடியோவும் மிகவும் ஆபாசமாக உருவாக்கப்பட்டிருந்தது.

எனவே, இதை மூத்த இயக்குனர் பாரதிராஜா மிகவும் கடுமையாக கண்டித்திருந்தார். 

அதைத்தொடர்ந்து, பாரதிராஜா இயக்கத்தில் 1981ம் ஆண்டு வெளியான ‘டிக்டிக்டிக்’ பட போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து  ‘இத பார்த்த போது கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ?’ என சந்தோஷ் பி ஜெயக்குமார் பதிவிட்டிருந்தார். இதற்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இதைத்தொடர்ந்து சந்தோஷ் குமார் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

'இரண்டாம் குத்து' படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீஸருக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதைச் செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா. அவருடைய சாதனைகளில் 1 சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இருக்கிறார், எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது.

இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News