Categories: Cinema News latest news

சிம்புவை மரியாதை குறைவாக பேசிய இயக்குனர்.! கொந்தளித்த ரசிகர்கள்.!

தமிழ் சினிமாக்களில் நல்ல திரைப்படங்களை கொடுத்து திறமையான இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் இயக்குனர் மிஷ்கின். அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என இவர் எடுத்த அனைத்து திரைப்படங்களும் நல்ல திரைப்படங்கள் ஆகவே அமைந்துள்ளது.

இவரது, படங்களுக்கு ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆழமாக இருக்கிறதோ அதே அளவுக்கு இவரது பேட்டிகள் மற்றும் மேடைப் பேச்சுகளுக்கும் இணையவாசிகள் மிகவும் ஆர்வமாக காத்திருப்பர்.

திரையுலகில் பல பிரபலங்கள் தங்கள் நண்பர்களையும் கூட மேடைகளில் பேசும் போது அவர் இவர் என்று மரியாதையாக மட்டுமே பேசுவர்.

இதையும் படியுங்களேன்- இத பாத்துட்டு என் மகன் ரெம்ப வருத்தப்பட்டான்.! உண்மையை உளறிய சியான்.!

அதே நெருக்கமான நேரங்களில் நீ வா போ என்று மரியாதை குறைவாக பேசி இருந்தாலும் மேடை பேச்சுகளில் அதனை வெளிக்கொண்டு வர மாட்டார்கள் அங்கு மரியாதையாக பேசுவார்கள்.

ஆனால், இயக்குனர் மிஷ்கின் தான் எப்படி பேசுவோம் அதே மேடையிலும் பேட்டிகளிலும் குறிப்பிட்டு பேசிவிடுவார். அப்படி அவர், பலரை பற்றி நீ, வா, போ, என்றும் அவன், இவன் என்றும் பேசியுள்ளார்.

அப்படி ஒரு பேட்டியில் சிம்பு பற்றி கேட்கப்பட்டது சிம்பு உடன் அடுத்த படம் எடுக்க உள்ளீர்களா? என்று கேட்கப்பட்டபோது சிம்புவிடம் கதையை கூறி விட்டேன். அவன் அந்த கதையை கேட்டு மிரண்டு விட்டான் என பேசி இருந்தார்.

நடிகர் சிம்புவை அவன், இவன் என்று கூறியதே இணையத்தில் சிம்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி வந்தது. ஆனாலும் மிஷ்கின் அந்த சலசலப்புகள் எல்லாம் கண்டு பயந்து ஒதுங்கி போவது அல்ல மீண்டும் தனது பழைய ஸ்டைலிலேயே தற்போதும் பேசி வருகிறார்.

Manikandan
Published by
Manikandan