Connect with us
AVM Saravanan, Visu

Cinema News

ஏவிஎம் நிறுவனம் எவ்வளவோ சொல்லியும் விசுவின் படத்தை வாங்க மறுத்த விநியோகஸ்தர்… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்!

ஏவிஎம் தயாரிக்க, விசு இயக்க 1986ல் வெளியான படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. இந்தப் படத்திற்கு அப்போது பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுபற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

ஏவிஎம் நிறுவனத்தின் நிரந்தர விநியோகஸ்தர் ஆனந்தா பிலிம்ஸ் சுரேஷ். ஒரு காலகட்டத்தில் மோகன் நடித்த மெல்லத் திறந்தது கதவு, அர்ஜூன் நடித்த சங்கர் குரு, விசு நடித்து இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் ஆகிய 3 படங்களையும் தயாரித்தது ஏவிஎம். நிறுவனம். மெல்ல திறந்தது கதவு படத்தில் தான் முதன் முதலாக எம்எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய படம். எம்எஸ்வி.க்கு உதவுவதற்காக ஏவிஎம் தயாரித்த படம் தான் இது.

இந்த 3 படங்களையும் ஏவிஎம். சரவணன் ஆனந்தா பிலிம்ஸ் சுரேஷிடம் விலை பேசினார். அப்போது ‘மெல்லத்திறந்தது கதவு படத்தில் மோகனும், ராதாவும் நடிக்கின்றனர். ஆர்.சுந்தரராஜன் இயக்குகிறார். இன்னொன்று அர்ஜூன் கதாநாயகன். அது ஒரு நல்ல கமர்ஷியல் படம்’ என்றார். உடனே ‘அந்த 2 படத்தையும் நான் வாங்கிக்கறேன்’ என்றார் சுரேஷ்.

SAM

SAM

உடனே ‘இன்னொரு படத்தைப் பற்றி நான் உங்கக் கிட்ட சொல்லல. அது விசு நடித்து இயக்கும் சம்சாரம் அது மின்சாரம். அந்தப் படத்தையும் சேர்த்து நீங்க வாங்கிக்கணும். இந்த மூணு படத்தோட விலையும் 30 லட்சம். மெல்லத் திறந்தது கதவு 18 லட்சம். சங்கர் குரு 6 லட்சம், சம்சாரம் அது மின்சாரம் 6 லட்சம்’ என்றார் ஏவிஎம்.

சரவணன். உடனே ‘சுரேஷ், நீங்க சொன்ன முதல் 2 படத்தையும் நான் வாங்கிக்கறேன். ஆனா 3வதா சொன்ன சம்சாரம் அது மின்சாரம் வேண்டாம்’ என்றார். அவர் அப்படி சொன்னதுக்க முக்கியமான காரணம் என்னன்னா அதுக்கு முன்னாடி விசுவின் இயக்கத்தில் வந்த சில படங்கள் வெற்றி பெறவில்லை.

‘இல்ல சுரேஷ். இந்தப் படம் வெற்றிப் படமா அமையும். நம்பிக்கையா வாங்குங்க’ என எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தார் ஏவிஎம்.சரவணன். ஆனாலும் சுரேஷ் மறுத்துவிட்டார். இருவருக்கும் நல்ல நட்பு.

அந்த உரிமையில் ‘நாளை காலை அலுவலகத்துக்கு வாங்க. பேசலாம்’ என்றார் ஏவிஎம்.சரவணன். அப்போதும் அவர் வற்புறுத்தவே, ‘உங்க கிட்ட நான் பல படங்கள் வாங்கியிருக்கேன். அதனால உங்க பேச்சைத் தட்ட விரும்பல.

அந்தப் படத்துக்கு நான் 6 லட்சத்தை கிப்ட் செக்கா தர்ரேன். இந்தப் படம் நட்டமானாலும் பரவாயில்லை’ என்று வாங்கினார். ஆனால் முதலில் வெளியானது சம்சாரம் அது மின்சாரம் தான்.

படம் வசூலில் சக்கை போடு போட்டது. 3 படங்களுக்கான 30லட்சம் கலெக்ஷனையும் அந்த ஒரே படம் ஈட்டியது. அது மட்டும் 36 லட்சத்தை வசூல் செய்து கொடுத்தது. அடுத்ததாக வருமானம் பார்த்தது சங்கர் குரு.

இதையும் படிங்க… கவுண்டமணியுடன் 35 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றும் இயக்குனர்… அட இவரா?

ஆனால் மெல்லத் திறந்தது கதவு படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. பின்னாளில் ஏவிஎம்.சரவணன் சொன்னதை மட்டும் நான் கேட்கலைன்னா எவ்வளவு பெரிய நஷ்டத்துக்கு ஆளாகியிருப்பேன் என்று அந்த விநியோகஸ்தர் என்னிடம் சொன்னார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top