×

பரபரப்பான சூப்பர் ஓவர் சப்புன்னு முடிஞ்சது… எல்லாம் ரோஹித் செய்த தவறால்தான்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த பரபரப்பான போட்டியில் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்றது.

 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த பரபரப்பான போட்டியில் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் அபார வெற்றி பெற்றது..

நேற்று நடந்த 10 ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி பின்ச், டிவில்லியர்ஸ் மற்றும் தேவ்தட் படிக்கல் ஆகியோரின் அபாரமான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்களை சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய மும்பை அணி தொடக்கத்திலேயே தடுமாறினாலும் 15 ஆவது ஓவருக்குப் பின்னர் வானஜாலம் காட்டியது. களத்தில் இருந்த பொல்லார்ட்டும், இஷான் கிஷானும் எல்லா பக்கமும் சிக்ஸர்களை விளாசி பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்களைக் கதிகலங்க வைத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியும் 201 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது. அந்த அணியின் இஷான் கிஷான் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதில் 99 ரன்கள் சிக்ஸர்களாக வானவேடிக்கைக் காட்டிய  இஷான் கிஷான் இறங்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா  பொல்லார்ட்டையும்  பாண்ட்யாவையும் இறக்கினார். ஆனால் அவர்களால் பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை. 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து ஆடிய பெங்களூர் அணி 8 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இஷான் கிஷான் இறங்கியிருந்தால் போட்டி இன்னும் அதிக இலக்கை பெங்களூர் அணிக்கு நிர்ணயித்திருக்கலாம் என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News