×

சிம்பு படத்திற்கு இசையமக்கும் பிரபல ஹீரோ? - கசிந்த தகவல்

 

நடிகர் சிம்பு தான் நடிக்கும் திரைப்படங்களில் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும் என எப்போதும் எதிர்பார்ப்பார். அதேபோல், பாடல் காட்சிகளிலும் செம எனர்ஜியாக நடனம் ஆடி அசத்துவார். இதுவரை அவர் நடித்த படங்களே அதற்கு சாட்சி.

இந்நிலையில், மாநாடு திரைப்படத்திற்கு முன் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இப்படத்திற்கு நடிகர் ஜெய் இசையமைக்க வாய்ப்பிருப்பதாக செய்தி கசிந்துள்ளது. 

சுசீந்திரன்  ஜெய் நடித்து முடித்துள்ள ஒரு புதிய திரைப்படத்தில் அவர்தான் இசை அமைப்பாளர். எனவே, சிம்பு சம்மதம் தெரிவித்தால் அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கும் அவரே இசையமைப்பாளராக நியமிக்கலாம் என சுசீந்திரன் யோசித்து வருகிறாராம்.

ஆனால், சிம்புவுக்கு யுவன் சங்கர் ராஜேவே எப்போதும் பிடித்த இசையமைப்பாளார் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

From around the web

Trending Videos

Tamilnadu News