Connect with us

Cinema News

ஆல் ஏரியாவையும் அதிரவிட்ட புஷ்பா 2… தமிழ்நாட்டுல 100 கோடியாமே?!… மாஸ்டர் பிளான் போங்க…

புஷ்பா 2 திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சிக்கு பாட்னாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த காரணத்தால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன், பகத் பாஸில், சுனில் ரெட்டி, ஜெகதீஷ் பிரதாப், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இதையும் படிங்க: சத்தியமா கேட்குறீங்க? வயிறு எரிஞ்சு சாவுங்க.. அஜித் – யோகிபாபு போட்டோவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்

தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் நடைபெறும் செம்மரக்கடத்தல் மற்றும் பின்னணி அரசியலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார்கள். முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்தியா முழுவதிலும் முதல் பாகம் 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. பாகுபலி படத்திற்கு பிறகு மற்ற மொழி படங்களிலும் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா படம் அமைந்திருந்தது.

இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்தார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக மிக பிரம்மாண்டமாக இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வந்தது. இரண்டாவது பாகத்தையும் மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

pushpa2

pushpa2

இப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ட்ரெய்லர் வெளியாகி 15 மணி நேரத்தில் 37 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்திருக்கின்றது. இப்படம் சர்வதேச அளவில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

நேற்று பாட்னாவில் ட்ரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். கடும் பனிப்பொழிவிலும் கட்டுக்கடங்காத கூட்டம் புஷ்பா 2 ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்ததை பார்த்த பட குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். முதலில் இந்த திரைப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் வாங்கியிருந்தது.

தற்போது பாட்னாவில் கிடைத்த வரவேற்பை பார்த்த மைத்திரி மூவி மேக்கஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தமிழிலும் தாங்களே வெளியிட்டுக் கொள்கின்றோம் என்கின்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. விரைவில் அனைத்து இடங்களுக்கும் சென்று படம் குறித்து ப்ரோமோஷன் செய்வதற்கு தற்போது படக்குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கங்குவா படத்தால் சூர்யா கேரியரில மாற்றம்… ரோலக்ஸ்ல நடிச்சாலும் சிக்கல் இருக்கு…! பிரபலம் சொல்லும் தகவல்

தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. நம் தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களிலே 100 கோடி வசூல் செய்வதற்கு திணறி வரும் நிலையில் வெளிமாநில படமான புஷ்பா 2 தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்து விடுமா? என்று சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள். இருப்பினும் புஷ்பா 2 ட்ரெய்லரே மிகப் பிரம்மாண்டமாக இருப்பதால் படம் 100 கோடியை வசூல் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று கூறப்படுகிறது.

author avatar
ramya suresh
Continue Reading

More in Cinema News

To Top