×

நான் பற்ற வைத்த நெருப்பொன்று..சுனாமியாக மாறும்... தெறிக்கவிட்ட ரஜினிகாந்த்

நான் போட்ட அரசியல் புள்ளி தற்போது ஒரு சுழலாக உருவாகியுள்ளது; இதை மக்கள் மத்தியில் தடுக்க முடியாது; இந்த சுழல் வலுவான அலையாக மாற வேண்டும் என ரஜினி தெரிவித்துள்ளார்.
 

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி தனக்கு முதல்வர் ஆசையில்லை எனவும், தனக்கு நேரடி அரசியலில் ஆர்வம் இல்லை எனவும் பகீரங்கமாக தெரிவித்தார். மேலும், தான் வெற்றி பெற்றால் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் எனவும், தகுதியான ஒருவரை முதல்வர் பதவியில் அமர வைப்பேன் எனக்கூறியதோடு, இளைஞர்கள் மற்றும் மக்களிடையே எழுச்சி ஏற்பட்ட பின் அரசியலுக்கு வருவேன் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், நேற்று சென்னையில் ஊடகவியாளர் ரங்கராஜ் பாண்டே நடத்திய சாணக்யா விழாவில் கலந்து கொண்ட ரஜினி ‘ நான் போட்ட அரசியல் புள்ளி தற்போது ஒரு சுழலாக மாறியுள்ளது. இதை மக்கள் மத்தியில் தடுக்க முடியாது. இந்த சுழல் வலுவான அலையாக மாற வேண்டும். 

தேர்தல் நெருங்க நெருங்க அது அரசியல் சுனாமியாக மாறும். இது ஆண்டவன் கையில் உள்ளது. மக்களிடம் உள்ளது எனப் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News