Categories: Cinema News latest news

விஜய் கெரியரில் மிக நீளமான இரண்டாவது படம் ‘கோட்’! முதல் படம் எதுனு தெரியுமா?

Vijay: விஜய் லீடு ரோலில் நடிக்கும் கோட் திரைப்படம் பெரிய அளவில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது .படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இன்னொரு பக்கம் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் விஜய் இந்த படத்தின் மூலம் எப்படிப்பட்ட ஒரு விமர்சனத்தை பெறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது கோட் திரைப்படம் .சமீபத்தில் தான் இந்த படத்திற்கான சென்சார் முடிவடைந்து ua சான்றிதழை வழங்கி இருக்கிறது சென்சார் போர்டு. கிட்டத்தட்ட படத்தின் நீளம் 2 மணி 59 நிமிடம் இருந்தாலும் படத்தின் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் சில ப்ளூபர் காட்சிகளும் இடம்பெறுவதால் இன்னும் ஒரு நான்கு நிமிட காட்சிகளை சேர்த்து மறுபடியும் சென்சருக்கு அனுப்பி இருக்கிறது கோட் திரைப்பட குழு.

இதையும் படிங்க: கோட் படத்துக்கு பெரிய புரொமோஷனாகும் 4வது சிங்கிள்… சங்கீதாவுக்கும் சர்ப்ரைஸ்

அதனால் ஒட்டுமொத்தமாக படத்தின் நீளம் 3 மணி 3 நிமிடம் என சொல்லப்படுகிறது. இதுதான் விஜய்யின் கெரியரில் அவர் நடித்த இரண்டாவது நீளமான திரைப்படம் என்றும் சொல்லப்படுகிறது. முதலில் அதிக நீளம் கொண்ட முதல் திரைப்படமாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படம். அந்தப் படத்தின் நீளம் 3 மணி 8 நிமிடமாக இருந்தது.

அதன் பிறகு இந்த கோட் திரைப்படம் தான் இரண்டாவது நீளமான திரைப்படமாக அமைந்திருக்கிறது. அந்த ப்ளூப்பர் காட்சிகள் பெரும்பாலும் மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆப் ஸ்கிரீனில் நடக்கும் விஜயின் ஹியூமர், மறக்க முடியாத சில நினைவுகள், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த காமெடியான சில விஷயங்கள் இவைகளையெல்லாம் சேர்த்து தான் அந்த நான்கு நிமிட காட்சிகளாக அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சூரியை காலி செய்த மாரி!.. வாழை அடித்த அடியில் காணாமல் போன கொட்டுக்காளி..

ஏற்கனவே தமிழ்நாடு தவிர்த்து மற்ற ஏரியாக்களில் கோட் திரைப்படத்தின் புக்கிங் ஆரம்பித்து விட்டது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தமிழ்நாட்டில் புக்கிங் ஆரம்பித்து விடும் என திருப்பூர் சுப்பிரமணியன் கூட ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

வெளியான தகவலின் படி கோட் திரைப்படம் ஒரு முழு எண்டெர்டெயின்மெண்ட்  திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அப்பா மகன் என இரு வேடங்களில் நடிக்கும் விஜய் ஒரு ஃபுல் ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, லைலா, சினேகா என பல நடிகர்களும் படத்தில் நடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : டோன்ட் டச் மி!.. கையை பிடித்த கமெடி நடிகரிடம் கோபப்பட்ட தல!.. இப்படிப்பட்டவரா அஜித்!..

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini