×

தமிழகத்திற்குள்ளேயே முதல் நபர்! மதுரையில் ஒருவருக்கு கொரோனா - பாதிப்பு 12ஆக உயர்வு

மதுரையில் உள்ள ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சீனாவில் உருவாகிய வைரஸ் தற்போது தமிழகம் வரை பரவி விட்டது.  இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து நேற்று மாலை வரை 11 ஆக இருந்தது.

இந்நிலையில், மதுரையில் 54 வயது மதிப்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. 

இதில் அதிர்ச்சி என்னவெனில், தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா பரவி முதல் நபர் இவர் ஆவார். இவர் எந்த வெளிநாட்டுக்கும் சென்று வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவும் நிலை உருவாகியுள்ளது.

அனைவரும் விழிப்புடன் இருக்கும் தருணம் இது. அஜாக்கிரதையாக இருந்தால் நாமும் பாதிக்கப்பட்டு நம்மால் மற்றவரும் பாதிக்கும்நிலை உருவாகும் என்பதை மறந்துவிடக்கூடாது.

From around the web

Trending Videos

Tamilnadu News