×

சூரரைப்போற்று மாஸ் கிளாஸ் - திரையுலகின் முதல் விமர்சனம்

 

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் மிகுந்த எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இத்திரைப்படம் நிஜ கதையிலிருந்து எடுக்கப்பட்டது. 
இப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. எனவே, இப்படம் விளம்பரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சூர்யாவே தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் நேரடியாக இப்படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இத்திரைப்படம் திரையுலகை சேர்ந்த சிலருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. எனவே, அவர்கள் படத்தை பாராட்டி தங்களின் கருத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குனர் பாண்டிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சூரரைப்போற்று ஒரு புதிய அனுபவம். இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் நெஞ்சை தொடுகிறது. சுதா கொங்கராவின் கடின உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஜி.வி.பிரகஷின் இசை தீபாவளி விருந்தாக அமையும். படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்’ என டிவிட் செய்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News