×

ஜார்க்கண்டிலிருந்து கிளம்பியது முதல் ரயில்.. கொரோனாவை எதிர்க்குமா?

வெளிமாநில மாணவர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் முதல் ரயில் இன்று ஜார்க்கண்டிலிருந்து கிளம்பியது. பிறமாநில மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் ரயில் மூலமாகத் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வது தொடர்பான அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, முதல் ரயில் ஜார்க்கண்டிலிருந்து ராஜஸ்தானுக்கு இன்று பயணிகளுடன் புறப்பட்டது.

 

சமூக இடைவெளியை உறுதி செய்யும் விதமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பயணிக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பை ஒன்றும் வழங்கப்பட்டு இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் வெற்றியைப் பொறுத்து அடுத்தடுத்து இதே நடைமுறையைத் தொடர்வது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம். இதுகுறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், “இந்த உத்தரவுக்காக மத்திய அரசுக்கும் ராஜஸ்தான் அரசுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல இன்னொரு ரயில் நாளை தன்பாத் நகரிலிருந்து கிளம்பும்” என்றும் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News