×

முதல் இரண்டு படமும் கைகொடுக்கல… மீண்டும் தமிழில் நடிக்கும் பஹத் பாசில் –இயக்குனர் இவர்தான்!

மலையாள நடிகரான பஹத் பாசில் மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மலையாள நடிகரான பஹத் பாசில் மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகரான பஹத் பாசிலுக்கு கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அந்த அளவுக்கு அவர் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஆனால் தமிழில் கதாநாயகனாக நடிக்க அவர் நீண்ட நாட்களாக தயங்கி வந்தார். அதற்கு காரணம் அவரது பக்கத்து வீட்டுப்பையன் போன்ற தோற்றத்தை தமிழக ரசிகர்கள் கதாநாயகனாக ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகமே.

ஆனாலும் வேலைக் காரன் படத்தில் வில்லனாக நடித்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. அதையடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸில் நடித்தார். அந்த படமும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாவதாக மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்தில் தான் நடிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த முறை எப்படியும் தமிழில் வெற்றியை ருசித்து விடுவது என்ற உறுதியோடு அவர் அந்த படத்துக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

தியாகராஜன் குமாரராஜா, பஹத் பாசில், சூப்பர் டீலக்ஸ், thyagarajan kumararaja, super deluxe, bhagath fasil

From around the web

Trending Videos

Tamilnadu News