×

அரபிக் கடலோரம் பாட்டுக்கு அசத்தல் நடனம் போட்ட முன்னாள் கதாநாயகி!

90 களில் பிரபலமாக இருந்த நடிகை பிரகதி இப்போது அம்மா மற்றும் அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 

90 களில் பிரபலமாக இருந்த நடிகை பிரகதி இப்போது அம்மா மற்றும் அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பாக்யராஜ் இயக்கிய வீட்ல விஷேஷங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. அதன் பின் தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்த ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். அதன் பின்னர் இப்போது மீண்டும் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நகைச்சுவை நடிகர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறி பரபரப்புகளைக் கிளப்பினார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பம்பாய் படத்தில் இடம்பெற்றுள்ள அந்த அரபிக்கடலோரம் பாட்டுக்கு அசத்தலாக பாலே டான்ஸ் ஆடி அதை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News