×

தந்தை செய்த குற்றத்துக்கு மகளை உயிரோடு கொளுத்திய கும்பல்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் உயிரோடு கொளுத்தியுள்ளது.

 

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் உயிரோடு கொளுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பர்சோலி கிராமத்தில் பிரதீப் சிங் - கன்வர் சிங் என்ற இருவர்களுக்கும் நீண்ட காலமாக குடும்பப் பகை இருந்துள்ளது. இது சம்மந்தமாக ஜூன் மாதம் நடந்த சண்டையில் கன்வர் சிங்கை பிரதீப் சிங் கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பிரதீப் சிங்கை பழிவாங்க காத்திருந்த கன்வர் சிங்கின் உறவினர்கள் அவர் மகளை உயிரோடு கொளுத்திக் கொன்றுள்ளனர். சிறையில் இருக்கும் கணவர் கன்வீர் சிங்கைப் பார்க்க சென்றுவிட அவர் மகள் ஷரதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட எதிர்க்கும்பல் வீட்டு வாசலில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த போது அவர் கை கால்களை கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி அவரைக் கொளுத்தியுள்ளனர்.

இதில் உடல் முழுவதும் எரிந்து கருகிய அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News