×

14 வயதிலேயே கர்ப்பமாகி குழந்தையைப் பெற்ற சிறுமி… பெற்றோருக்கு பயந்து பிரிஸரில் வைத்து…?

ரஷ்யாவில் 14 வயதில் கர்ப்பமான சிறுமி பிறந்த குழந்தையை பிரிஸரில் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ரஷ்யாவில் 14 வயதில் கர்ப்பமான சிறுமி பிறந்த குழந்தையை பிரிஸரில் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள வெர்க்-துலா என்ற கிராமத்தில்  வசித்து வந்துள்ளார் அந்த 14 வயது சிறுமி. இவர் தன்னுடன் படித்த 16 வயது சிறுவனுடன் நெருக்கமாக பழகியதால் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் இருவரும் தங்கள் காதலை ஒரு கட்டத்தில் முறித்துக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து தனது பெற்றோர் கூட அறியாமல் குழந்தையை வயிற்றுக்குள் வளர்த்து வந்துள்ளார் அந்த சிறுமி. அவர்களும் சிறுமி உடல் எடைக் கூடுவதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இந்நிலையில் குழந்தையை தானே பெற்றெடுத்த சிறுமி அதை ஒரு பிளாஸ்டிக் பேக்கில் போட்டு பிரீசரில் வைத்துள்ளார். ஆனால் அவருக்கு உதிரப்போக்கு அதிகமாகவே பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது ஆம்புலன்ஸில் இருந்த துணை மருத்துவர்களிடம் தான் கர்ப்பமாக இருந்ததையும், குழந்தை பெற்றெடுத்ததையும் கூறியிருக்கிறார்இதையடுத்து பிரிஸரில் சென்று பார்த்தபோது குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்தது. சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் 16 வயது சிறுவன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்போது அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News