Connect with us
sivji

Cinema News

இப்படியெல்லாம் பண்ணுவாரா எம்ஜிஆர்!.. சிவாஜியிடம் ஆடிய போங்காட்டம்!..

சிவாஜி , எம்ஜிஆர் என்றாலே ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்த இருபெரும் தூண்கள். இவர்கள் ஒரு காலத்தில் தன் முழு ஆளுமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நேரம். இருவரும் சேர்ந்து சினிமாவில் மாபெரும் புரட்சியே செய்திருக்கிறார்கள்.

நடிப்பிற்கு சிவாஜி என்றால் வீரத்திற்கு பேர் போனவர் எம்ஜிஆர். இருவரின் படங்களுமே ஒவ்வொன்றிற்கும் வித்தியாசமானதாகவே இருக்கும். எம்ஜிஆரின் சண்டைக் காட்சிகளுக்காகவே ஏராளமான ரசிகர்கள் கூடினார்கள். குடும்ப ஆடியன்ஸை தன் பக்கம் நடிப்பால் ஈர்த்தவர் சிவாஜி. இருவருக்கும் இடையே சொல்லமுடியாத போட்டிகள் இருந்தன.

sivaji1

sivaji mgr

ஆனால் அந்த போட்டிகள் ஆரோக்கியமான போட்டியாகவே கருதப்பட்டது. அவர்களுக்கிடையில் இருந்த அந்த ஆழமான நட்பை இந்த சின்ன தகவல் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு சமயம் தஞ்சாவூரில் இரு திரையரங்குகளை திறப்பதற்காக எம்ஜிஆரை புக் செய்திருந்தாராம் சிவாஜி.

ஆனால் சிவாஜியின் குழந்தை தன்மையை நிரூபிக்க எம்ஜிஆர் ஒரு சின்ன விளையாட்டு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது சிவாஜிக்கு தொலைபேசியில் அழைத்து என்னை டில்லிக்கு வர சொன்னதாக தகவல் வந்திருக்கிறது. நான் இப்பொழுது விமான நிலையத்தில் தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதை கேட்டதும் சிவாஜிக்கு ஒரே படபடப்பு. ஏற்கெனவே திரையரங்கை திறந்துவைக்க எம்ஜிஆர் கண்டிப்பாக வருவார் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் சிவாஜி. ஆனால் எம்ஜிஆர் இப்படி சொன்னதும் ஷாக் ஆகிவிட்டார். அந்த நேரம் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

sivaji2

sivaji mgr

உடனே சிவாஜி விமான நிலையத்தில் போய் தேடியிருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் இல்லை. அங்கு இருந்த ஊழியர்களிடமும் முதலமைச்சர் வருவதாக சொன்னாரே வந்தாரா என கேட்க அப்படி ஒரு ஏற்பாடே இல்லையே என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே எம்ஜிஆருக்கு மீண்டும் தொலைபேசியில் பேசிய சிவாஜி எம்ஜிஆர் வீட்டில் தான் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு சென்றிருக்கிறார்.

இதையும் படிங்க : எத வேணுனாலும் கழட்ட தயார்!.. விஜயகாந்திற்காக மானத்தை கூட பெரிதாக நினைக்காத பிரபல நடிகர்!..

அங்கு போனதும் ஏன் இப்படி செய்தீர்கள்? என்று எம்ஜிஆரிடம் கேட்க அவர் சும்மா என சொல்லி அவருடைய குழந்தை தன்மையை அங்கு இருந்தவர்களிடம் காட்டியிருக்கிறார். ஆனால் டென்ஷனாக சிவாஜி இப்பொழுதாவது திரையரங்கு விழாவிற்கு வருவீர்களா? இல்லையா என கேட்க கண்டிப்பாக வருவேன் என்று கூலாக பதில் சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர். இந்த சுவாரஸ்ய தகவலை கலைஞானம் தெரிவித்தார்.

Continue Reading

More in Cinema News

To Top