×

மதுபாட்டில்களில் இனி இந்த வாசகம் இருக்காது – தமிழக அரசு அதிரடி முடிவு!

தமிழ்நாட்டில் விநியோகம் செய்யப்படும் மது பாட்டில்களில் இடம்பெறும் வாசகம் இனிமேல் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக அரசு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் அமைப்பின் கீழ் மது விநியோகம் செய்து வருகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் வருவதால் மதுவிலக்கு என்று சொல்லி ஓட்டுக் கேட்டும் அதை நிறைவேற்றாமல் உள்ளது. இதனால் உழைக்கும் ஏழை எளிய மக்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்வை இழந்து வருகின்றனர்.

அதனால் எச்சரிக்கை வாசகமாக மதுபான பாட்டில்களில் ‘மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு ‘ என்ற தொடர் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இனிமேல் இந்த வாசகம் நீக்கப்பட்டு அதற்குப் பதில் ‘மது அருந்துதல் உடல்நலத்துக்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் ‘ என்ற வாசகம் இடம்பெறும் என சட்டமன்றத்தில் நடந்த விவாவத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News