இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக காத்திருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தனம் இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை மிகப்பெரிய பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக், படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் என 30 மேற்பட்ட பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இதையும் படிங்களேன் – ஹாலிவுட் அரங்கை அதிரவைத்த தனுஷ்… கொஞ்சம் பேசுனதுக்கே இப்படியா.?! வைரலாகும் புதிய வீடியோ..
இப்படத்தின், பிரம்மாண்ட காட்சிகள் அதிலும் சண்டை காட்சிகள் மிகவும் கவர்ந்ததால் முதல் பாகம் பிரமாண்டமான சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என ரசிகர்கள் நினைத்திருந்தன. ஆனால், படத்தில் அந்த மாதிரி பிரம்மாண்ட சண்டை காட்சிகள் முதல் பாகத்தில் இருக்காது என்றும் இரண்டாம் பாகத்தில் வேண்டமெனால் இருக்கலாம் என படத்தை பார்த்த நம்ப தக்க சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால், படத்தின் சண்டை காட்சிகளை எதிர்பார்த்து வராதீர்கள் என கிசுகிசுக்கின்றனர்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…