
Cinema News
படப்பிடிப்பில் நிறைய பேருக்கு காயம்.. கஷ்டப்படுத்திதான் படம் எடுப்பார் வெற்றிமாறன்..! – விடுதலை பட அனுபவத்தை பகிர்ந்த நடிகர்!
Published on
By
புதுப்பேட்டை திரைப்படம் வழியாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மூணார் ரமேஷ். 2006 ஆம் ஆண்டு வந்த புதுப்பேட்டை திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். அந்த படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து சிவாஜி, ஆடுகளம், விசாரணை இன்னும் பல படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் விடுதலை திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில் விடுதலை படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
காட்டில் நடந்த படப்பிடிப்பு
விடுதலை படம் மொத்தமும் ஒரு காட்டில்தான் படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்டிற்குள் செல்வதற்கே மூன்று வண்டிகள் மாறி மாறி செல்ல வேண்டும். காடு மிகவும் சகதியாக இருப்பதால் ஜூப் வண்டியில்தான் காட்டிற்குள் செல்ல முடியும்.
இது மட்டுமின்றி பாம்பு, அட்டைகள், பூச்சி தொல்லை என பல தொல்லைகளுக்கு நடுவேதான் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு படம் எடுக்க வேண்டும் எனில் அதை வெற்றிமாறன் சுலபமாக எடுக்கமாட்டார். மிகவும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் கஷ்டப்படுத்தி, அதிகமாக உழைத்துதான் ஒரு படத்தை இயக்கி முடிப்பார் என்கிறார் மூணார் ரமேஷ்.
viduthalai
ஊழியர்கள் அனுபவித்த கஷ்டங்கள்
இது இல்லாமல் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் பல ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. படம் காட்டில் எடுக்கப்பட்டதால் பாறைகளில் ஏறி இறங்கிதான் பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போது கால் வழுக்கி கீழே விழுதல் போன்ற பல நிகழ்வுகளில் பலருக்கும் காயமாகியுள்ளது.
இவ்வளவு கஷ்டப்பட்டு இயக்கிய படம் திரையில் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...