Categories: Cinema News latest news throwback stories

சத்யராஜ் செய்த அந்த உதவி… இப்படியும் ஒரு வள்ளலா என புகழ்ந்து தள்ளிய இயக்குனர்

வைகாசி பொறந்தாச்சு என்ற முதல் படத்திலேயே மாபெரும் ஹிட்டைக் கொடுத்தவர் இயக்குனர் ராதா பாரதி. இவர் தனது திரையுலக சுவாரசியங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்போது சத்யராஜ் இவருக்கு செய்த உதவியைப் பற்றியும் நெகிழ்ச்சியாக சொன்னார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

ஒரு தடவை நான் டைரக்ஷன் பண்ணிக்கிட்டு இருந்த போது பொருளாதாரத்துல கொஞ்சம் பின்தங்கிய நிலைமையில இருந்தேன். அப்போ எனக்கு சத்யராஜ் ஞாபகம் வந்தது. அப்போ அவரு பீக்குல இருந்த நேரம். யதார்த்தமா ஒரு போன் பண்ணினேன். ஆஸ்பிட்டலுக்குப் போகனும். மருத்துவச்செலவு இருக்குன்னு சொன்னேன்.

இதையும் படிங்க… மலையாள நடிகர்.. பாலிவுட் நடிகை!.. அடுத்த படத்துக்கு பக்கா ஸ்கெட்ச் போடும் சூர்யா…

“எத்தனை மணிக்கு வர்றீங்க?”ன்னு கேட்டார். நீங்க சொல்ற டயத்துக்கு வர்றேன்னு சொன்னேன். “உங்களுக்கு எப்ப டைம் இருக்கு?”ன்னு சொல்லுங்க. அந்த டயத்துக்கு நான் வர்றேன்னாரு. 10 மணிக்கு வர்றேன்னு சொன்னேன். “சரி வாங்க”ன்னாரு. மெடிக்கல் செலவு. ஹார்ட் கொஞ்சம் வீக்கா இருக்குன்னு டாக்டர் சொன்னார். அங்கே என் மனைவியைக் கூட்டிக்கிட்டுப் போறேன்.

அங்கப்போனா 20 ஆயிரம் ரூபாயை எடுத்து ரெடியா வச்சிருக்காங்க. முதல்ல தண்ணிய எடுத்துக் கொடுத்தாங்க. அப்புறம் பணத்தை எடுத்துக் கொடுத்தாங்க. அதுக்கு அப்புறம் காபி சாப்பிட்டுட்டுத் தான் போகணும். டிபன் என்ன வேணும்கறத ரெடி பண்ணச் சொல்றேன்னாரு.

Radhabharathi, Sathyaraj

இப்படி ஒரு தன்மையான புண்ணியவானை நான் உலகத்துலயே பார்த்தது கிடையாது. அப்படி ஒரு உதவி. இந்தக் கை கொடுக்குறது இந்தக் கைக்குத் தெரியக்கூடாதுங்கற அளவுக்கு செஞ்ச உதவி. முதல்ல அவங்க என்ன எதிர்பார்க்குறாங்களோ அதை டேபிளுக்கு எதிர்க்க வச்சிட்டாங்க. நான் தர்ரேன். தரல அப்படிங்கற டவுட் வரக்கூடாது. அப்படிங்கறதுக்காக அவரு பணத்தை டேபிள் மேல வச்சிட்டாரு.

வந்து பார்க்கவும், பணம் இருக்குதுன்னா நமக்காக இருக்குங்கற எண்ணம் வருமா, இல்லீங்களா சார். அப்பவே எனக்கு முகம் மலர்ந்துருச்சு. இதயத்துடிப்பு வந்து நார்மலா ஆயிடுச்சு. ஹார்ட் அட்டாக் இருக்குதா, இல்லியான்னே தெரியலங்க சார். அது போனது மாதிரியான ஃபீலிங்கே வந்துடுச்சு சார். அந்த மாதிரி மனுஷன் சார் சத்யராஜ் சார் என உள்ளம் குளிர அவரது வள்ளல் தன்மையை நெகிழ்ச்சியுடன் சொன்னார் இயக்குனர் ராதாபாரதி.

 

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v