×

எனக்கும் ஏதா பார்த்து செய்யுங்க...  கெளதம் மேனனிடம் வாய்ப்பு கேட்ட பிரபல ஹீரோ!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பல ஹீரோக்கள் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சான்ஸிற்காக காத்திருப்பார்கள். அந்தவகையில் தமிழ் இயக்குனர்களிலேயே சற்று வித்யாசமாக , ஸ்டைலீஷாகப் படம் பண்ணுபவர் கெளதம் வாசுதேவ் மேனன்.

 

இவரது இயக்கத்தில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம், மின்னலே வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா’ இப்படி தான் இயக்கிய அத்தனை படத்திலும் அந்தந்த காதலுக்கு உயிர் கொடுத்து உருவாக்கியிருப்பர். இந்நிலையில் தற்ப்போது இந்த கொரோனா லாக்டவுனில்  ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை  இயக்கி VTV கார்த்திக் - ஜெஸியை நம் கண் முன் நிறுத்தினார்.

இதையடுத்து தற்போது நடிகர் சாந்தனு - மேகா  ஆகாஷை வைத்து 'ஒரு சான்ஸ் குடு' எனும் வீடியோ பாடல் உருவாக்கியுள்ளார். மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். இப்பாடலின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்பாடலின் முழு வீடியோ யூடியூபில் இன்று வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. தற்போது நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் " ஷாந்தனு மற்றும் கலையரசனின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். அத்துடன் இயக்குனர் கெளதம் மேனனிடம், எனக்கும் உங்க இயக்கத்தில் ஒரு சான்ஸ் குடுங்க சார் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அதிக லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது. கெளதம் மேனன் மனசு வைத்தால் போதும் அவரது அடுத்த ஹீரோ விஷ்ணு விஷால் தான்.

From around the web

Trending Videos

Tamilnadu News