×

நடிப்பின் நாயகன் எங்கள் அண்ணன் - சூர்யா பிறந்தநாளில் தெறிக்கவிடும் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் ’சூரரைப்போற்று’. படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

 


இதையடுத்து அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க உள்ளார் . மேலும்,  வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். அத்துடன் பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் விக்ரம் குமார், சமீபத்திய பேட்டியில் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் சூர்யாவுக்கு தான் சொன்ன கதை பிடித்திருந்ததால் 2021-ல் இருவரும் இணைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று  (ஜூலை 23) தனது 45வது பிறந்தநாளை  கொண்டாடும் நடிகர் சூர்யாவிற்கு ரசிகர்கள், நண்பர்கள் , பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். சூர்யாவின் பிறந்தநாளை விமர்சியாக கொண்டாட காத்திருந்த ரசிகர்கள் கொரோனாவால் அது முடியாமல் போனது. இதனால் சமூக வலைதளங்களில் காமன் டிபி வைத்து #Anna #NadippinNayagan  போன்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி  ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News