×

ஷங்கரின் புதிய படத்தில் அந்த ஹீரோயினாம்!... ரசிர்களுக்கு காத்திருக்கு ட்ரீட்....  

 
shankar

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர்.இந்தியன் 2 திரைப்படம் தொடர்பான வழக்கில் ஷங்கருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என 2 மொழிகளில் உருவாகவுள்ளது.

இது அரசியல் பரபர ஆக்‌ஷன் கதையாகும். இப்படத்தில் ராம்சரண் முதலமைச்சராக நடிக்கவுள்ளார். அதோடு, இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. இப்படத்தில் நடிகை கியரா அத்வானி நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். 

rashmika

இந்நிலையில், இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே, கியரா அத்வானி நடிப்பதாக கூறப்பட்டது. ஒருவேளை 2 ராம் சரண் என்றால் 2 ஹீரோயின்கள் நடிக்கலாம் என நம்பப்படுகிறது.

KiaraAdvani001

கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News